சண்முகப்பிரியா கடிதங்கள் -2

சண்முகப்பிரியா சிறுகதை

The short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.

The story is a reflection of how people from our past can suddenly resurface in our minds due to certain events or triggers. It highlights how our past experiences and relationships shape us and stay with us, even if we’re not always consciously aware of them.

Isn’t it amazing how our minds work? Our brains are like giant storage containers of memories, and sometimes the smallest thing can bring back a long-forgotten memory. It could be a scent, a song, a place, or even a person that triggers these memories and makes us think about the past.

These memories are a part of who we are, and they shape our personality, influence our decisions, and guide our actions in ways we might not even realize. Our past relationships, especially, have had a profound impact on us. They’ve taught us about love, friendship, trust, and sometimes, about heartache and loss.

Even when we think we’ve moved on and forgotten, our past experiences and relationships continue to live within us, subtly influencing our present. They’re like a part of our subconscious, quietly shaping our thoughts, feelings, and actions.

It’s amazing to think that our past is always a part of our present. We carry a piece of all our experiences and relationships with us wherever we go, and they continue to shape us in ways we might not even realize.

This “Shanmugapriya” short story also carries an unrealized moment and relationship.

Kogilavani Krishnamorty

அவள் இழந்தது…

அண்ணா, சண்முகப்பிரியாவில் வரும் கதைச்சொல்லியை உங்களோடு பொருத்தியே வாசிக்க முடிந்தது. இப்போதுள்ள உங்களை அப்படியே சுருக்கி; சிறியதாக்கி.

முதல் வரியிலேயே கதை தொடங்கிவிடுகிறது. அடுத்து என்ன என்ன என்று உங்கள் மொழி அழைத்துச் செல்கிறது. சண்முகப்பிரியா அழ மாட்டாள். அவளிடம் வெளிப்படுவது பரவசம் பரவசம் பரவசம் மட்டுமே. அந்தப் பரவசத்தைக் கதைச்சொல்லியிடம் பெருகிறாள். அதையே மீண்டும் அவனுக்குக் கொடுக்கிறாள். வலியால் அழாத அவளை அழ வைக்க சுப்பிரமணியம் ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் வேறொரு சாத்தியமே அவளைச் சிதைக்கிறது.

இனி அவளிடம் அந்தச் சிரிப்பு என்றென்றும் வெளிபடாது. சிரிப்பை நிரந்தமாக இழந்தவள் கதைச்சொல்லியை இனி ஒருபோதும் எதிர்க்கொள்ள மாட்டாள். அவள் இழந்தது தன் ஆளுள்ளத்தில் இருந்த குழந்தமையை. தன்னைப் போல குழந்தை மனதுடன் இருந்த கதைச்சொல்லியை அணுக இனி அவளிடம் வேறு வாசல்களே இல்லை.

அது மரணத்தைவிட கொடுமையானது. கதை நிம்மதியை இழக்க வைத்தது அண்ணா.

கோ. மாறன்

சக மனிதர்களாக நாம் வெட்கப்பட வேண்டும்

சண்முகப்பிரியா போன்ற ஒரு கதாப்பாத்திரம் நைஜீரிய இந்திய கலப்பில் மட்டும் உருவாகி இருப்பார்கள் என்றில்லை. நம்மைச் சுற்றியும் அவள் போன்ற மாற்று உருவ அமைப்புக் கொண்டவர்கள், அழகில் குறையுள்ளவர்களாகவும் இருப்பார்கள். கருப்பு நிறத் தோல், குண்டான உருவ அமைப்பு கொண்டவர்களில் பெண்களே அதிகம் மன பாதிப்புக் கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போன்று மனிதப் பிறவிகள் தான் என்பதை மறந்து கேலி செய்வதும், பட்டப் பெயர் வைத்து அழைப்பது தன்னை முழுமையான நாகரிகம் அடைந்த மனிதனாக காட்டிக் கொண்டு அவர்களுக்குள் சுயத் திருப்தியும் அடைவார்கள்.

இந்தக் கதையில் வரும் ஆசிரியரே அவ்வாறு வௌவால், பூதம் என்று பட்டப் பெயர் வைப்பதைப் பார்க்கும் மாணவர்களிடம் அந்தப் பழக்கத்தை விதைப்பதோடு, பாதிப்படையும் மாணவர்களின் மனதில் அந்தச் சிறுவயதிலேயே தாழ்மை உணர்வு பச்சைக் குத்தப்பட்டு இறுதிவரை அழிக்க இயலாமல் போய் விடுகின்றது.

தானும் சக மனிதப் பிறவி தானே, ஏன் இவர்கள் விளையாட சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள் என்ற புறக்கணிப்பு எத்தகைய வேதனையை ஒருவருக்குள் கொடுக்கும் என்பதை சண்முகப்பிரியா வழியாக ஆசிரியர் நம்மையும் உணர்வைத்திருக்கிறார். ஓய்வு நேரத்தில் அவளை விளையாட சேர்த்து கொள்கையில், அவள் அந்தப் பேய் விளையாட்டோடு ஒத்திசைந்து விடுவது அவளுக்குள் ஒரு வித சுதந்திர உணர்வை ஏற்படுத்தியதை அந்தக் காட்சியில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

சண்முகப்பிரியா நாயகி என்றால், நாயகன் வௌவால் தன்னிலையில் கதையைச் சொல்கிறான் என்பதைவிட எதோ முன்பு புரியாமல் போன ஒன்றை தற்போதைய வயதின் அறிவை வைத்தே விடையைத் தேடிப் பார்க்கிறான்.

தொண்ணூறுகளில் பிரபலமான பைலோ பாப் ஐஸ், காசு மிட்டாய் மற்றும் அந்தக் காலகட்டத்தில் பிரபலமான ஆரம்பப்பள்ளி மாணவர்களின் ஓய்வு நேர விளையாட்டை ஆசிரியர் பதிந்திருக்கிறார். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் இந்தக் கதையை வாசிக்கும் போது தொண்ணூறுகளில் நேரடியாக இந்தக் காட்சிகளைத் தரிசித்து வந்தவர்கள் பெரும் உணர்வைப் பெற மாட்டார்கள்.

‘வௌவால் , கொக்கு பாஞ்சாங், சூரிய குஞ்சி, பூதம், சூத்தாம்பட்ட கிழிய போவுது’ கதையின் இன்னொரு சுவாரசியமான பகுதி.

“ஆனா ….” என்றளவில் முற்றுப் பெற்ற சுப்பிரமணிய ஆசிரியரை நோக்கிய சண்முகப்பிரியாவின் அம்மாவின் அந்த வசனமும் அதற்குப் பிறகான அந்த ஆசிரியரின் முடிவும் கதையின் முடிவை விட முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன். சொல்லப்போனால் முடிவில் கதாசிரியர் போட்டப் புதிரை விட ‘ஆனா..’ என்ற சண்முகப்பிரியாவின் அம்மாவின் வார்த்தை சுப்பிரமணிய ஆசிரியரோடு என்னையும் பாதித்தது.

‘ஆனா’ என்ற ஒரே வார்த்தை சுப்பிரமணிய ஆசிரியரின் ஒட்டு மொத்த ஆணவத்தையும் அடக்கிவிட்டதைக் கவனிக்கும் போதும் ஏற்கனவே வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதையான மக்ஸீம் கார்க்கியின் Her Lover என்றக் கதையும் அதன் இறுதியில் ‘ கேட்டு வெறுப்பூறிப் போன பழைங்கதை இது. இவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதற்கே ஒரு மனிதன் வெட்கப் படத்தான் வேண்டும்’. என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது. சமூக அமைப்பில் சண்முகப்பிரியா போன்ற கதாபாத்திரங்களின் புறக்கணிப்புக்குச் சக மனிதர்களாக நாம் வெட்கப்பட வேண்டும்.

ஜி.எஸ். தேவகுமார்

ஏன் இப்படி?

அன்பு ஆசிரியருக்கு,

ஒரு சிறுகதை ஏன் இவ்வாறு மனதை உருக்க வைக்கிறது எனப் புரியவில்லை. ஒரு மாணவி நுழைந்து வெளியேறுகிறாள். அவள் சோகம், அவள் தாயின் சோகம் எங்கும் மிகுதியாக இல்லை. ஒரு சொல் அதிகமாக இல்லை. ஆனால் ஏன் அவர்கள் சோகம் என்னிடம் குடிபுகுந்து கஷ்டப்படுத்துகிறது.

அந்த ஆசிரியர் அடைந்த தண்டனை போதுமானதா? தன்னைத் தானே தண்டித்துக் கொள்வது தண்டனை ஆகுமா? வௌவ்வால் இன்று அவன் மகள் வழி என்ன புரிந்துகொண்டிருப்பான். தன் மகள் அடையக்கூடிய மன வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் வௌவ்வாலுக்கு எதையாவது சொல்லுமா?

அப்படியானால் சண்முகப்பிரியா போன்ற சிறுமிகளுக்கு இந்த உலகில் நீதியே இல்லையா?

ஹம்சவர்த்தினி, கிள்ளான்.

மண்ணின் கதை சொல்லி – சௌந்தர்

சௌந்தர்

வனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி.  மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது. 

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -1

சண்முகப்பிரியா சிறுகதை

அன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.

ராம்

Continue reading

தாரா: ஒரு நாட்டார் கவிதை – மணிமாறன்

தாரா நாவல் 80களில் மலேசியாவின் கம்பப் பின்புலத்துடன் குகன் கொலையிலிருந்து தொடங்குகிறது. கம்பம் என்பது தமிழ் சொல்லானாலும் மலாய் மொழியில் கம்போங் என்றால் (கிராமம்) என்றே அறியப்படுகிறது. கூலி வேலைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வரலாற்றில் மருவி கம்பத்தை அடைந்தவர்களின் படிமத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர்.

Continue reading

நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

Continue reading

அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

Continue reading

யோகமும் சௌந்தரும்

சௌந்தர்

சௌந்தரை எனக்கு இலக்கிய வாசகராகவே அறிமுகம். ‘அசடன்’ நாவல் குறித்து ஜெயமோகன் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். நானும் அப்போதுதான் அசடனை வாசித்து முடித்திருந்ததால் அக்கட்டுரையை உடனடியாக வாசித்தேன். ஆழமான வாசிப்பு. தான் அதை புரிந்துகொண்ட வகையில் எளிமையாக எழுதியிருந்தார். எளிமையின் மேல் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டவரால் மட்டுமே எவ்வளவு சிரமமானதையும் எளிமையாகச் சொல்லிவிட முடியும் என நம்புபவன் நான். அதேசமயம் அவர்களால் மட்டுமே தேவையானபோது அதன் உச்சமான சாத்தியங்களுக்கும் சென்றுதொட இயலும்.

Continue reading

யாவரும் பதிப்பகத்திற்கு 60,000 ரூபாய் நிதி

பெருமழையின் காரணமாக சென்னை புத்தக் கண்காட்சி அரங்கில் நீர் புகுந்து சில பதிப்பகங்களின் நூல்கள் பாதிக்கப்பட்டன. அதில் யாவரும் பதிப்பகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நட்டம் எனக் கேள்விப்பட்டேன். நேற்று யாவரும் பதிப்பகத்திற்கு மலேசிய நண்பர்கள் சார்பாக 50,000 ரூபாய் அனுப்பி வைத்தோம். (நண்பர் அனைவருமாக கொடுத்த மொத்தத் தொகை 2750) இது தவிர என் முகநூலைப் பார்த்து சிங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குறிய அழகிய பாண்டியன் அவர்கள் தன் சார்பாக 10,000 ரூபாய் வழங்கினார். இத்தொகை யாவரும் பதிப்பகம் அடைந்த நட்டத்தில் இருந்து ஓரளவு மீண்டுவர உதவும் என நம்புகிறேன்.

Continue reading

2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.

Continue reading

தாரா சொல்லும் வாழ்க்கை – சுகுனா செல்வராஜா

தாரா நாவலைப் படித்து முடித்து விட்டேன். எனக்கு மற்றவர்கள் போல் உங்கள் கதையில் விமர்சனம் செய்ய தெரியவில்லை. நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று உங்கள் எழுத்தில் மூலம் தெரிந்து கொண்டேன்.

நீங்கள் எழுதிய நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இதுதான். தாராவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் என்னை சுற்றி உள்ள நபர்கள் போல தோன்றியது.

Continue reading